மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு ஏதுவாக ஹால் டிக்கெட் வழங்கக்கூடிய பணியை துரிதப்படுத்த தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று  மதியம் 2 மணி முதல் அரசு தேர்வுகள் இயக்கக இணையதளமான www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கென  கொடுக்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பதிவுசெய்து செய்து ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் பயிற்று மொழியாக கொண்டு பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர மற்ற மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து நாளை முதல் ஜன., 20க்குள் ஆன்லைன் வழியாக அரசு தேர்வுத் துறைக்கு செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுக்கு 225, மற்றவைகளுக்கு 175 கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.