மும்பை போன்ற மகாநகரத்தில், பிரபல நடிகர் சல்மான் கானின் வீட்டில் இரண்டு நாட்களில் நடந்த இரண்டு பாதுகாப்பு முறைகேடுகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை, 32 வயதான ஈஷா சப்ரா என்ற பெண், பேன்ட்ராவின் Galaxy Apartments வளாகத்தில் உள்ள நடிகரின் வீட்டிற்குள் நுழைய முயன்றார்.

தனிப்பட்ட பாதுகாப்பு குழுவினரால் தடுத்து பிடிக்கப்பட்ட அவர், “ஆறு மாதங்களுக்கு முன் நடந்த ஒரு பார்ட்டியில் சல்மானை சந்தித்தேன், அவர் அழைத்ததால் வந்தேன்” என தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், சல்மான் கானின் குடும்பம் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளது. இதனையடுத்து, போலீசார் ஈஷா சப்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முந்தைய நாள், சத்தீஸ்கரில் இருந்து வந்த 23 வயதான ஜிதேந்திர சிங் என்ற இளைஞர், அந்தக் கட்டிடத்தில் வசிக்கும் ஒருவரின் காரில் வந்துவிட்டார். கட்டிடத்துக்குள் நுழைந்ததும் போலீசால் பிடிக்கப்பட்டார். அவர் “நான் நடிகரை சந்திக்கவே வந்தேன்” எனக் கூறியிருக்கிறார்.  தற்போது, இருவரும் தனித்தனியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.