தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கடந்த எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடு்த்து மாணவர்கள் என்ன படிக்கலாம்? எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம்? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறைதங்களுடைய பிள்ளைகளை உயர்கல்வி அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க உதவி மையம் ஒன்றை அமைத்துள்ளது. அதன் மூலமாக மாணவர்கள் உயர் கல்வி குறித்த சந்தேகம் என்றால் 14417 என்ற நம்பரில் இயங்கும் உதவி மையத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை தொலைபேசி மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் தங்களுடைய அடுத்த கட்ட படிப்பை குழப்பமே இல்லாமல் தேர்வு செய்ய முடியும். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் இந்த மையம் சிறந்த ஆலோசனையை வழங்குகிறது. அதாவது தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்த கல்வியாண்டு வரை காத்திருக்காமல் அடுத்துவரும் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற ஆலோசனை வழங்கப்படும் எனவும் தேர்வு குறித்து மாணவர்களுக்கு இருக்கும் பயத்தை நீக்கி ஆலோசனை வழங்க இந்த அருமையான திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது.