முன்னாள் இந்திய கேப்டன் தோனி டிராக்டர் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி, சமூக வலைதளங்களில் மற்ற கிரிக்கெட் வீரர்களை போல பெரிதும் ஆக்டிவாக இருக்க மாட்டார்.. இருப்பினும், அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது, ​​​​இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார், இது சமூக ஊடகங்களில் பிரபலமாகி விட்டது. இந்த சமீபத்திய வீடியோவில், தோனி தனது ராஞ்சி பண்ணை வீட்டின் ஒரு பகுதியாகத் தோன்றும் நிலத்தை டிராக்டரைப் பயன்படுத்தி உழுது புதிய அவதாரத்தில் தோன்றுகிறார்.

எம்எஸ் தோனி இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோவைப் பகிர்ந்துள்ள எம்.எஸ். தோனி, “புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி ஆனால் வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்தது” என்று எழுதினார். அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோவை வெளியிட்டதால், ரசிகர்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் கேப்டனை கூலாக வரவேற்கத் தொடங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாவில் தல தரிசனம்! என கமெண்ட் செய்துள்ளது. இதேபோல சின்னதல ரெய்னா உட்பட பலரும் வரவேற்றுள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸை கேப்டன் கூல் வழிநடத்துவார் :

ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை ஏற்க தோனி தயாராகிவிட்டார். அவர் உள்நாட்டு லீக்கில் தொடர்ந்து விளையாடினாலும், 2020 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.முந்தைய ஆண்டு தோனி அணியின் கேப்டன் பதவி  ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் லீக்கின் முதல் பாதியில் அணியின் செயல்பாடு சரியாக இல்லாமல் தொடர் தோல்விக்கு பின் , தோனி மீண்டும் கேப்டனாக மாறினார். தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் என கூறப்படுகிறது. அதன்பின் கேப்டனாக ஜடேஜா செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.