டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களுடன் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். மேலும் சர்வதசே அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று காலை 9:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தனது முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சுழலில் ரவீந்திர ஜடேஜாவும், அஷ்வினும் மிரட்டினர். ஜடேஜா 5 விக்கெட்டும், அஷ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இப்போட்டியில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பல்வேறு சாதனைகளைப் படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களுடன் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். ஷேன் வார்ன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடுக்கு பிறகு சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது வீரர் இவர்.

இந்தியாவில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். இதற்கு முன் இந்திய அணிக்காக அனில் கும்ப்ளே இந்த சாதனையை படைத்திருந்தார். கும்ப்ளே 93 டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் சர்வதேச அளவில் வேகமாக (89 டெஸ்ட் போட்டிகளில்) 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் அஸ்வின். 80 டெஸ்ட் போட்டிகள் ஆடி 450 விக்கெட்டுகளை கடந்த முதல் வீரராக முரளிதரன் இருக்கிறார்.

கடந்த 2005ம் ஆண்டு ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அனில் கும்ப்ளே இந்த சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அஸ்வின் 92 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளே ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் இதுவரை 89 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 452 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 140 ரன்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சு. ஒரே இன்னிங்சில் 59 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகளையும், டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்தத் தொடரில் 157 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அஸ்வின் படைத்த சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது..

அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 450 ஓவர் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது பந்துவீச்சாளர் ஆனார். இலங்கையின் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (708), இங்கிலாந்தின் ஜிம்மி ஆண்டர்சன் (675), கும்ப்ளே, இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (566), ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் (563), மேற்கிந்திய தீவின் கோர்ட்னி வால்ஷ் (519). நாதன் லயன் (460) ஆகியோர் வெற்றிகரமான டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வினை விட முன்னிலையில் உள்ளனர். மேலும் அனில் கும்ப்ளே 132 டெஸ்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் ஆவார்.

நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் கவாஜா தலா 1 ரன் எடுத்து, ஷமி மற்றும் சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின் லாபுசேன் (49) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (37) சிறப்பாக விளையாடி சிறிது நேரம் கை கோர்த்து அவுட் ஆகினர். அதனைத்தொடர்ந்து ஹேண்ட்ஸ்கோம்ப் (31)மற்றும் அலெக்ஸ் கேரி (36) இருவரும் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தனர். மேலும்  கேப்டன் கம்மின்ஸ் (6) உட்பட  வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 63.5 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாகவும், கேஎல் ராகுல் நிதானமாகவும் விளையாடினர். பின் ராகுல் 20 (71) ரன்னில் அவுட் ஆனார். ரோஹித் சர்மா அரைசதம் கடந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்தது.  ரோஹித் சர்மா 56 ரன்களுடனும் , அஸ்வின் ரன் எடுக்காமல் களத்தில்உள்ளனர். இந்தியா 24 ஓவரில் 77/1 என இருக்கிறது. இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்குகிறது.