டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் ராபியின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது.. இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வீரர் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.. இந்தியாவில் அணில் கும்ப்ளே டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்டு எடுத்துள்ளார். 2வது இடத்தில் அஸ்வின் (451  விக்கெட்) ஏற்கனவே இருந்தார். 3வது இடத்தில் கபில் தேவ் 434 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

இந்த நிலையில் தனது 89 வது டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 450 விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.. முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சேன் வார்னேயின் சாதனையில் முறியடித்துள்ளார்.. அதாவது ஆஸ்திரேலியாவின் சேன் வார்னே, இங்கிலாந்து வீரர் ஸ்டுவர் பிராட் ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை படைத்தார்.

தற்போது ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்க்சில் 59 ஓவரில் 8 விக்கெட் இழந்து 173 ரன்களுடன் ஆடி வருகிறது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுசாக்னே 49, ஸ்டீவ் ஸ்மித் 37, அலெக்ஸ் கேரி 36 ரன்கள் எடுத்து  அவுட் ஆகி உள்ளனர். தற்போது ஹேண்ட்ஸ்கோம்ப் 27  மற்றும்  லியோன் ரன் எடுக்காமல் ஆடி வருகின்றனர். இந்திய அணியில் ஜடேஜா 4விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.