துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் லட்சக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. அது மட்டுமல்லாமல் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். அவர்கள் தங்களுடைய சொந்த நாடுகளிலேயே அகதிகள் போல் நிற்கதியாய் நிற்கின்றனர்.

இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இந்திய மதிப்பில் 2,51,185 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அனைத்தையும் சீர் செய்ய சுமார் 2 மடங்கு கூடுதலாக செலவாகும் எனவும் உலக வங்கி கணக்கிட்டுள்ளது. துருக்கிக்கான உலக வங்கி இயக்குனர் ஹம்பர்டோ லோபஸ் கூறியதாவது “துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 2023 ஆம் ஆண்டு அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து உலக வங்கி குடும்பம் மற்றும் மத்திய ஆசியாவின் துணைத் தலைவர் அண்ணா பிஜெர்டே கூறியதாவது “நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலைமை மிகுந்த கவலை அடைகின்றது. மேலும் சிரியாவிற்கான தனி சேத மதிப்பீட்டை விரைவில் உலக மங்கி வெளியிடும்” என அவர் கூறியுள்ளார்.