நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், வலைதளங்களில் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. மீறி பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில் வேட்பாளர்கள் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரங்களை மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது