
பிரேசிலில் 19 வயதுடைய மேத்தேயூஸ் பாவ்லக் என்பவர் வசித்து வந்துள்ளார். பாடி பில்டரான மேத்தேயூஸ் பாவ்லக் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாடி பில்டிங் நட்சத்திரமான மேத்தேயூஸ் பாவ்லக் பத்தொன்பது வயதிலேயே பயிற்சி மூலம் நல்ல தேர்ந்த பாடி பில்டருக்கான உடல்வாகுவை கொண்டிருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மேத்தேயூஸ் பாவ்லக்bஉடல் பருமனுடையவர்கள் எடையை குறைக்கும் போட்டியில் கலந்து கொண்டார். அதிலிருந்து அவருக்கு பாடி பில்டிங் மீது ஆர்வம் வந்தது.
ஏராளமான பாடி பில்டிங் போட்டிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரேசிலின் சாண்டா காத்ரீனா மாகாணத்தில் இருக்கும் தனது வீட்டில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு மேத்தேயூஸ் பாவ்லக் உயிரிழந்தார். உடலை அசாதாரணமாக மற்ற பாடி பில்டிங் பயிற்சியில் உபயோகப்படுத்தப்படும் அனபாலிக் ஸ்டீராய்டுகளின் பாதுகாப்புத் தன்மை மீதான சந்தேகத்தை எழுப்புகிறது. இளம் வயதில் அசாதாரண உடல்வாகை மேத்தேயூஸ் பாவ்லக் பெற்றிருந்தார். அதற்கு ஸ்டீராய்டுகள் பயன்படுத்தியது தான் காரணம் என கூறப்படுகிறது.