
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மலையனூர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு பள்ளி மாணவியுடன் பேசி பழகினார்.
இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென தங்கராஜ் சிறுமியை அழைத்து சென்று ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து தாலி கட்டினார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் தங்கராஜை போலீசார் குழந்தை திருமண வழக்கில் கைது செய்தனர். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு திருமண வயது அதாவது 18 வயது பூர்த்தியாக இன்னும் 55 நாட்கள் மட்டுமே இருக்கிறது எனவும் அந்த பெண்ணின் விருப்பத்தோடு தான் திருமணம் நடந்துள்ளது என்றும் தங்கராஜ் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதனால் திருமணம் நடந்தாலும் உடனடியாக போலீஸ்சார் காவல் நிலைய பிணையில் அவரை விடுவித்துள்ளனர். மேலும் அந்த சிறுமி பெற்றோருடன் செல்ல மாட்டேன் என்று கூறிவிட்டதால் விடுதிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.