
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி சக்தி நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தொழில் செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் ஆன்லைனில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்தார். அதனை பார்த்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கவிதா என்பவர் சிவகுமாரை தொடர்பு கொண்டு வேலை குறித்து விசாரித்துள்ளார். கடந்த 18 நாட்களுக்கு முன்பு கவிதா வேலையின் சேர்ந்து அந்த வீட்டிலேயே தங்கி இருந்தார். இந்த நிலையில் சிவகுமார் கவிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி வந்துள்ளார்.
மேலும் அவரை வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார். நேற்று கவிதா ஜன்னல் வழியாக அங்கிருந்த அவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கவிதாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் இதுகுறித்து கவிதா கூறியதாவது, பணிக்கு சேர்ந்த நாள் முதல் சிவகுமார் என்னை வீட்டிற்குள் பூட்டி விட்டு செல்வார். என்னை சித்திரவதை செய்கிறார். நான் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் என்னை மீட்டனர் என கூறியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சிவகுமாரிடம் விசாரித்து வருகின்றனர்.