
மிஸஸ் இந்தியா 2024 பட்டம் வென்றவர் ரினிமா போரா. இவர் பிரபல யூட்யூபருக்கு நேர்காணலில் பேட்டி கொடுத்தார். அப்போது தன் காதலன் குறித்து பல புகார்களை முன் வைத்தார். அதாவது அவருடைய முன்னாள் காதலன் மாட்டிறைச்சி சாப்பிட தன்னை கட்டாயப்படுத்தியதாக கூறினார். அதோடு நமாஸ் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். கடந்த 16 வருடங்களாக நான் இந்த வேதனையை அனுபவித்து வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வர பல வருடங்கள் ஆகும்.
தற்போது எனக்கு அந்த வேதனை கிடையாது. நான் என்னுடைய 16 வயதில் பெங்களூருக்கு அசாமில் இருந்து படிப்பதற்காக சென்ற நிலையில் அப்போது ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை அடித்து துன்புறுத்தியதால் தலிபான் என்பேன். அவர் என்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதோடு கட்டாயமாக மாட்டிறைச்சி சாப்பிட வைத்த கொடூரமான நாட்களை என்னால் மறக்க முடியாது என்று வேதனையுடன் கூறினார். மேலும் நான் அவரை விட்டு விட்டால் என் மீது ஆசிட் வீசுவேன் என்று அவர் மிரட்டினார் என்றும் கூறினார்.