டெல்லியில் உள்ள நாக்லி பகுதியில் ஒரு வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது ஒரு சிறுவனும் சிறுமியும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதாவது அந்த வீட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் ஒரு 20 வயது வாலிபரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இவர்கள் இருவரும் காதலித்ததாகவும் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படும் நிலையில் போலீஸார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது சிறுமியின் மாமா ஏற்கனவே சிறுவனை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் காரணமாக போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.