
புதுச்சேரியில் இருக்கும் உணவு விடுதியில் விழுப்புரத்தைச் சேர்ந்த சிவா என்பவர் பணிபுரிந்து வந்தார். தனது பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு சிவா பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் அண்ணன் தனது நண்பர்களான முகமது அமீஸ், அப்துல் சலாம் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சிவாவை அழைத்து கண்டித்தனர். அப்போது பிரச்சினை ஏற்பட்டது. கடந்த ஆறாம் தேதி அப்துல் அமீஸ், அப்துல் சலாம் மற்றும் இரண்டு சிறுவர்கள் இணைந்து மது குடித்தனர்.
அவர்கள் சமாதானம் பேசுவதாக கூறி சிவாவை வரவழைத்து கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்து உடலை கடலில் தூக்கி வீசி அங்கிருந்து தப்பி சென்றனர். சிவாவின் உடல் எட்டாம் தேதி புது குப்பம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. இந்த விவகாரம் குறித்து சிவாவின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அப்போது அப்துல், முகமது உள்பட நான்கு பேர் சிவாவை கொலை செய்வது தெரியவந்தது. இதனால் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.