கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஜூசில் மது கலந்து கொடுத்து மயக்கி, இளம்பெண்ணின் ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம் செய்ததற்காக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகரை பகுதியில் வசிக்கும் முகம்மது ஜாஸ்மின் (28) என்பவருக்கு, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் சந்தேரா பகுதியைச் சேர்ந்த, கணவனைப் பிரிந்து வாழும் இளம்பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. 16 வயது மகன் உள்ள அந்த பெண்ணுடன் முகம்மது நெருக்கமாக பழகி, அவரின் வீட்டிற்கே சென்று தங்கி வந்துள்ளார்.

ஒருநாள், ஜூசில் மது கலந்து கொடுத்து மயக்கமடைந்த அந்த பெண்ணின் ஆபாச வீடியோவை முகம்மது தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை அவரது உறவினர்களுக்கும், சிறுவயதான மகனுக்கும் அனுப்புவதாக மிரட்டி, தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிகழ்வால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், சந்தேரா போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முகம்மது ஜாஸ்மின், போலீசில் பிடிபடாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, கோழிக்கோடு விமான நிலையத்தில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.