இந்தியாவில் தற்போது ஐடி துறையில் பணி நியமனங்கள் என்பது குறைந்து வருகிறது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக உலகம் முழுவதிலும் பல ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து  நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் சில ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் பிரபல TCS (TATA Consultancy services) நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி கூறியுள்ளார். அதன்படி நடப்பு ஆண்டில் உயர் செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட இருக்கிறது. இதேபோன்று பிற ஊழியர்களுக்கு 1.5 சதவீதம் முதல் 8 சதவீத வரை ஊதிய உயர்வு வழங்கப்பட இருக்கிறது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 11,436 பொடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.