தமிழகத்தில் 25 இடங்களில் பாஜக போட்டியிடும் என சொல்லி உள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பல. கூட்டணி வரும் நேரத்தில் நம்முடைய தலைவர்கள் பேசுவார்கள். NDA எப்படி இருக்கும் ? இன்னைக்கு நான் கருத்து சொல்ல விரும்பல. நான் தெளிவா இருக்கேன். கிரவுண்ட் எதை நோக்கி போகுது ?  கிரவுண்ட்ல ஷிப்ட் எப்படி ? இளைஞர்களிடம் எப்படி நாம் பேசணும் ? அவங்க எதிர்பார்க்கிற அரசியலை எந்த கட்சி கொடுக்குது ? அவர்களுடைய எண்ண ஓட்டம் ஒரு அரசியல் கட்சியில் பிரதிபலிக்குதா ? இதுதான் இன்னைக்கு கேள்வி.

இதை அட்ரஸ் பண்றது தான் 2024 எலக்சனே தவிர…  மிச்சம் இருப்பவர்கள்  எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டாங்க. 60 வயசுல இருக்குறவங்களும் ஆல்ரெடி முடிவு பண்ணிட்டாங்க…  55 வயது முடிவு பண்ணிட்டாங்க…  75 வயது முடிவு பண்ணிட்டாங்க….  விருப்பு,  வெறுப்பு ஐடியாலஜி சித்தாந்தம் அதையெல்லாம் அவுங்க 50 வருஷமா பார்த்துட்டாங்க. இன்னைக்கு கேம் இருக்கிறதே 57% வாக்காளர்களை யார் கவர போறா ? அதுதான் கேம். அதில் பாரதிய ஜனதா கட்சி இன்னைக்கு இருக்கு. எங்களுடைய அரசியல் அவர்களை சார்ந்தது. அவர்களுடைய நலனை சார்ந்தது என தெரிவித்தார்.

மாநில தலைவருடைய போஸ்டிங்குக்கு போட்டோ போட்டி நடைபெறுகின்றது என்ற கேள்விக்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,

தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். நான் ஏற்கனவே ஒரு இடத்துல சொல்லி இருக்கிறேன். மாநில தலைவர் பதவி வெங்காயம் மாதிரி என்று சொல்லி இருப்பேன். என்ன வெங்காயம் என சொல்லிவிட்டீர்கள் ? என்று கேட்காதீர்கள்…  நான் உண்மையை சொல்லுறேன். உறிச்சி பார்த்தா உள்ள ஒன்னும் இல்லை.  அதனால நான் எப்போதுமே அரசியலில் ஒரு பதவிக்காக வந்தவன் கிடையாது. பதவியை தூக்கி போட்டு வந்தவன். நானே இதைவிட அதிகமா 10, 15 மடங்கு பவரை பார்த்தவன் நானு. போட்டோ போட்டி,  இது, அதுன்னு…   நான் நிம்மதியா என் வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கேன் என தெரிவித்தார்.