
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சித்தன் காத்திருப்பு பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைரவேல் என்கிற மகன் இருக்கிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக வைர வேலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வைரவேல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 4000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.