
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மாவட்ட கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சிவமணி (64) என்ற மனைவி இருந்துள்ளார்.
இதில் சிவமணிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மகள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து ஒரு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிவமணி நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பில் அதாவது 14-வது மாடியிலிருந்து காய போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக சென்றார்.
அப்போது அவர் தவறி கீழே விழுந்துவிட்ட நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிவமணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பாக தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.