திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருக்கும் கிராமத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமி உயிரிழந்தார். இறுதி சடங்குகள் செய்து அந்த சிறுமியின் உடலை புதைத்து விட்டனர்.

அந்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அதிகாரிகள் முன்னிலையில் சிறுமியின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ததில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் தாத்தா தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததால் தான் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதனால் சிறுமியின் தாத்தாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.