
மும்பையில் உள்ள விரார் பகுதியை சேர்ந்த 36 வயது ஆசிரியர் பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவரது பயிற்சி நிலையத்தில் 13 வயது சிறுமி படித்து வந்த நிலையில் திடீரென ஒரு நாள் சிறுமி தான் பயிற்சி நிலையத்திற்கு செல்லவில்லை என கூறியுள்ளார். காரணம் கேட்ட பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கடந்த ஒரு வார காலமாக அந்த ஆசிரியர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சித்துள்ளார். இதை கேட்டு கடும் கோபத்திற்கு ஆளான பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆசிரியரை நேராக சந்தித்து கேட்டுள்ளனர்.
#Protests_women #virar#palghar
👉28 अगस्त को विरार से एक घटना सामने आई है जिसमें निजी क्लासेस चलाने वाले शिक्षक द्वारा 7वीं कक्षा में पढ़ने वाली नाबालिक के साथ अश्लील हरकत की, जिसके अभिवावकों ने उसकी पिटाई कर पुलिस के हवाले कर दिया#bignews pic.twitter.com/TPiDJtey3R— संपादक – विनोद कुमार तिवारी (@vinodtiwari988) August 29, 2024
அப்போது ஆசிரியரை சட்டையை கழற்றி கடுமையாக தாக்கவும் செய்துள்ளனர். அதன் பிறகு ஆசிரியரை ரத்தம் சொட்ட சொட்ட சிறுமியின் பெற்றோர் உட்பட அனைவரும் சேர்ந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் ஆகியுள்ளது.