பொதுவாக உலகம் முழுவதும் மாசுபாடு மற்றும் தவறான வாழ்க்கைமுறைகள் காரணமாக மனிதர்களின் ஆயுளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள ஹுன்ஸா பள்ளத்தாக்கு மக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் 120 முதல் 150 வயது வரை ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்பது உலகையே வியக்க வைக்கும் செய்தியாக உள்ளது.

இந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் கூட, 90 வயதிலும் கர்ப்பம் தரிக்க முடியும் திறனைக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான தகவலாக உள்ளது. மேலும், 60 முதல் 90 வயதுக்குள் உள்ள பெண்கள் கூட 25-30 வயதானவர்களைப் போல் இளமையாகவே தோற்றமளிக்கின்றனர். இந்த நீண்ட ஆயுள் மற்றும் இளமையின் ரகசியம், அவர்கள் கடைப்பிடிக்கும் இயற்கை வாழ்க்கைமுறை, மாசில்லாத சுற்றுச்சூழல், தூய்ந்த காற்று மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுக்கட்டுப்பாடுகளில்தான் உள்ளது.

ஹுன்ஸா மக்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து நடைப்பயிற்சி அல்லது சைக்கிள் பயணம் போன்ற உடற் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இவர்களது உணவில் பெரும்பாலும் பழங்கள், காய்கறிகள், பச்சை உணவுகள், முழுதானியங்கள் மற்றும் அதிகமாக தண்ணீர் இருக்கின்றது. அதேபோல், மாசுபாடற்ற இயற்கையான பகுதிகளில் வாழ்வதால், அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது.

இத்தகைய வாழ்க்கை முறை இன்று உலகத்துக்கு ஒரு சிறந்த பாடமாகவும், ஆரோக்கிய வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தருணமாகவும் மாறியுள்ளது.