தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கவின். இவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பியார் பிரேமா காதல் படத்தை இயக்கியுள்ள இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றிலும் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் ஒருவர் உங்களை அடுத்த தளபதின்னு சொல்றாங்களே என கேள்வி எழுப்பினர். இதைக் கேட்டவுடன் கவின் சற்று பதறிப் போனார். உடனடியாக அவரிடம் கையெடுத்து கும்பிட்டு ஐயா, இது 12 வருஷம் போராட்டம், இந்த மாதிரி எதையாவது கேட்டு அப்படியே முடிச்சு விட்றாதீங்க, அப்படியெல்லாம் இல்லைங்க என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.