11 வருட திருமணத்திற்குப் பிறகு, ஜி.வி.பிரகாஷ் க்கும் பாடகி சைந்தவிக்கும் இடையேயான எதிர்பாராத விவாகரத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்நிலையில் ரசிகர்கள் இருவரும் ஜோடியாக பங்கேற்ற பழைய நேர்காணல் காட்சிகளை கட் எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டு வைரலாகி வருகின்றனர். அதன்படி, ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சைந்தவி திருமண நாளன்று காலை ஜிவி பிரகாஷ் கொடுத்த பரிசு குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், நாங்கள் 12 ஆண்டுகள் காதலித்தோம். அதன் பிறகு எங்களது காதல் திருமணத்தில் வந்து நின்றது. திருமண நாளன்று காலையில் எனது அறைக்கு ஒரு மிகப்பெரிய பூங்கொத்து அதனுடன் ஒரு சாக்லேட் பெட்டி மற்றும் 12 ஆண்டு கால காதலுக்கு நன்றி என்ற அன்பு வார்த்தைகள் மிகுந்த கடிதம் ஆகியவற்றை ஜீவி அனுப்பியிருந்தார். அதை பார்த்ததும் மகிழ்ச்சியில் செய்வதறியாது திகைத்து நின்றேன். உடனடியாக அதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன் என தெரிவித்திருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.