
ஜெயிலர் படத்தின் அமெரிக்க முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயிலர் திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் ஜெயிலர் முதல் நாள் வசூல் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அமெரிக்காவில் திரையிடப்பட்ட ஜெயிலரின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா சினிமா துறை சார்ந்த தகவல்களையும், பாக்ஸ் ஆபீஸ் கலக்சன் குறித்த அப்டேட்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வரும் ரமேஷ் பாலா என்பவர் ஜெயிலர் திரைப்படத்தின் அமெரிக்காவின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தனது இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
ஜெயிலர் திரைப்படம் அமெரிக்காவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனாக $1,158,000 பெற்று சாதனை படைத்துள்ளது. இது அமெரிக்காவில் வாரிசு திரைப்பட படத்தின் வாழ்நாள் வசூலை விட அதிகமாகும். வாரிசு திரைப்படம் அமெரிக்காவில் மொத்தமாகவே $1,141,590 வசூல் ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
USA 🇺🇸 BOX OFFICE:
After premieres and few hrs into Day 1, #Jailer beats the life-time collections of #Varisu in USA 🇺🇸 #Jailer – $1,158,000#Varisu – $1,141,590
— Ramesh Bala (@rameshlaus) August 10, 2023