கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரத்தில் நீலாம்பூர் தேக்கு மரம் ரூ. 39.25 லட்சத்துக்கு ஏலம் போனது. இது கேரளா வனத்துறை வரலாற்றில் இல்லாத விலையாக கருதப்படுகிறது. அதாவது நீலாம்பூர் வனத்துறையின் அருகே உள்ள அருவக்கோடு நெடுங்காயம் டிப்போ தோட்டத்தில் 3 பழமை வாய்ந்த தேக்கு மர துண்டுகள் ஏலம் விடப்பட்டது.

இந்த மரங்கள் கடந்த 10-ம் தேதி ஏலம் விடப்பட்ட நிலையில் ஒரு தேக்கு மர துண்டு 23 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. அதன் பிறகு மற்றொரு துண்டு 11 லட்சத்துக்கும், இன்னொரு தேக்கு மர துண்டு 5.25 லட்சத்துக்கும் ஏலம் போனது. அதன்படி மொத்தமாக 39 புள்ளி 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நிலையில் அரசுக்கு வரியாக 27 சதவீதம் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் 114 வருடங்கள் பழமை வாய்ந்த மரத்திலிருந்து இந்த 3 தேக்கு மர துண்டுகளும் கீழே விழுந்த நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த அஜீஸ் என்பவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.