தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக சென்னையில் உள்ள ராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு  1044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 409 சதுர அடி பரப்பளவாகும். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 122.20 கோடி ஆகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பனை கடந்த 2-ம் தேதி அமைச்சர் த.மோ அன்பரசன் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு அமைச்சர் த.மோ அன்பரசன் கூறியதாவது, இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், 2020-ம் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டது. ஆனால் கடந்த 2 வருடங்களாக மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்புகள் போன்றவைகள் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவருடைய தொடர் முயற்சிகளின் விளைவாக தற்போது குடிநீர், மின்சார இணைப்பு மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் 2 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, விரைவில் அடுக்குமாடி குடியிருப்புகள் திறக்கப்படும். அதன் பிறகு பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.