ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியையும் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். ஐபிஎல் தொடரில் அதன் உரிமையாளர்கள் எப்படி லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ அணிகளை அதன் உரிமையாளர்கள் 5000 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்கினார்கள். இவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டு அந்த அணிகள் தோல்வி அடைந்தால் உரிமையாளர்களுக்கு நஷ்டம் தானே ஏற்படும் என்று கேள்வி பலரது மத்தியிலும் ஏற்படும். ஆனால் அதில் உண்மை இல்லை. ஐபிஎல் தொடரில் அதன் உரிமையாளர்களுக்கு லாபம் மட்டுமே ஏற்படும்.

அதாவது ஸ்பான்சர் ஷிப் மூலமாக அணி உரிமையாளர்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் கிடைக்கிறது. ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்யும் டாடா குழுமம் வருடத்திற்கு 670 கோடி ரூபாய் ஸ்பான்சர் செய்கிறது. இதில் 40 சதவீதத்தை பிசிசிஐயும் 60 சதவீதத்தை அணி உரிமையாளர்களும் பிரித்து எடுத்துக் கொள்வார்கள். இது போக ஒவ்வொரு அணிக்கும் ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் மூலமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கிறது.

அதன் பிறகு உள்ளூர் மைதானத்தில் நடக்கும் போட்டிகளுக்கு ஐபிஎல் உரிமையாளர்களே டிக்கெட் விலையை நிர்ணயம் செய்வதால் அதன் மூலமும் ஒரு தொகை லாபமாக கிடைக்கிறது. ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு 20 கோடி ரூபாயும், 2-வது பரிசாக 12.5 கோடி வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகையும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு தான் கிடைக்கும். மேலும் இப்படி வருடத்திற்கு 150 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவு செய்து விட்டு ஆயிரம் கோடிக்கு மேல் ஐ பி எல் உரிமையாளர்கள் லாபம் ஏற்றுகிறார்கள்.