இந்தியாவில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவியது. ஆனால் இந்த திட்டத்தில் பணிபுரிவோருக்கு ஊதியம் ஆனது ஆதார் பேமென்ட் மூலமாக வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்தால் ஆதாரங்கள் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் தான் சம்பளம் போடப்படும்.

ஆனால் கிராமங்களில் இந்த திட்டத்தில் வேலை செய்வோரில் அனைவருக்கும் இந்த வங்கி கணக்கு இல்லை.இதனால் கணிசமான எண்ணிக்கையில் ஆனவர்களுக்கு சம்பளம் கிடைக்காது. இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவும் குறைந்துவிட்டது. இவை அனைத்தும் தற்போது ஒரு சேர வருவதால் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.