நாட்டின் தற்போது 1,2,5, மற்றும் பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. தற்போது 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படவுள்ளது.  35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தை தயாரிப்பதற்கு 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, ஐந்து சதவீதம் நிக்கல் மற்றும் ஐந்து சதவீதம் துத்தநாகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு நூறு ரூபாய் நாணயத்தை இந்த மாதம் 30ஆம் தேதி வெளியிட உள்ளது. AIR இல் ஒளிபரப்பாகி வரும் பிரதமர் மோடியின் மன் கி பாத்தின் நூறாவது எபிசோடில் நிகழ்ச்சியை நினைவாக இந்த நாணயத்தை அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது. அசோகத் துணி முத்திரை, தேவ நாகரியில் இந்தியில் சத்தியமேவ ஜெயதே என பொறிக்கப்பட்டிருக்கும்.