நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் அகலவிலைபடியை உயர்த்தியது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகலவிலைப்படி வழங்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து பீகார் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களின் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்த்தி வழங்கின.

தற்போது இமாச்சல் பிரதேச அரசு மாநில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலை படியை மூன்று சதவீதம் உயர்த்து இருப்பதாக அறிவித்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

அதனை மற்ற மாநிலங்களைப் போலவே ஜனவரி 1ஆம் தேதி முன் தேதியிட்டு வழங்க உள்ளது. அண்மையில் கோவா மாநில அரசும் அகல விலை படியை உயர்த்தியது. இந்த வரிசையில் தமிழகம் எப்போது இணையும் என அரசு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டாம் அகல விலைப்படி உயர்த்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் தமிழகத்தில் பகல விலைப்படி உயர்த்தப்பட்டு விடுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.