
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் தான் மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கும். அதனால் மாணவர்கள் அனைவருமே பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர். இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெரும் மாணவர்களை பாராட்டும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் விதமாகவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாநிலத்தில் நல்ல மதிப்பெண் பெற்ற 88 மாணவர்கள் ராய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர்.