புனேவில் பள்ளி மாணவிக்கு நடன ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை 11 வயது பள்ளி மாணவி நடன ஆசிரியர் தன்னை தகாத முறையில் தொட்டதாக பள்ளி ஆலோசகரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக நடன ஆசிரியர் 10 வயது சிறுமியையும் தகாத முறையில் தொட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நடன பள்ளி ஆசிரியரை அதிரடியாக கைது செய்தனர்.