
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விழுதுபட்டு கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யாவுக்கு (19) பிரதாப் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது திவ்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த 10 நாட்களாக திவ்யா தன் தாய் வீட்டில் இருந்த நிலையில் திடீரென அவர் சம்பவ நாளில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அவருடைய கணவருக்கு தெரிய வந்த நிலையில் அவர் மன வேதனையில் விஷம் குடித்துவிட்டார். அவரை உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்று இறந்துவிட்டார்.
இதில் திவ்யா உயிரிழந்ததற்கான காரணம் தெரியாத நிலையில் தன் மனைவியின் இறப்பு செய்தியை கேட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து வந்தவாசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.