
சேலத்தில் நடந்த நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, ஐந்து ஆண்டுகளாக கட்டுவதற்கு எய்ம்ஸ் என்ன மருத்துவமனையா? இல்லை விண்வெளி மையமா? ஒழுங்காக நிதி ஒதுக்கி இருந்தால் இரண்டு ஆண்டில் முடித்திருக்கலாம்.
மதுரை வந்த நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை எந்நிலையில் இருக்கிறது என்பதை பார்த்தீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உள்துறை அமைச்சர் தன்னுடைய பேச்சில் ஆத்திரத்தை கொட்டி தீர்த்து உள்ளார் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.