ஆந்திர மாநிலத்தின் அன்னமயா என்ற இடத்தில் நடந்த ஒரு திருமணத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றிக் கொள்ளும் நேரத்தில், திடீரென ஒரு இளம் பெண் அங்கு வந்து அலறியபடி தாக்குதல் நடத்தியுள்ளார். அந்த மணமகன் தனது காதலன் எனவும், அவரை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.

அந்த இளம் பெண், மணமகனுடன் 10 வருட காதல் உறவில் இருந்துள்ளார். ஆனால் அவரைப் பற்றி எதுவும் சொல்லாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்ததால், கோபத்தில் அவரது திருமணத்திற்கு வந்துள்ளார். அங்கு வந்து மணமகனின் முகத்தில் அமிலம் வீச முயற்சித்த போது, மணமகன் தப்பித்துக் கொண்டார். அதற்கு பதிலாக அருகில் நின்ற ஒரு பெண்ணின் மீது அமிலம் பட்டு அவர் காயம் அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பெண் கத்தியால் மணமகனை தாக்க முயற்சித்த போது, அங்கு இருந்தவர்கள் அவரை தடுத்தனர். இதனால் இருவரும் காயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பெண், கடந்த 10 வருடங்களாக மணமகனுடன் காதல் உறவில் இருந்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற மணமகன் திரும்ப வராததால் அவரைத் தேடி வந்த போது, அவரது திருமணம் பற்றி தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்து அங்கு வந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.