
மத்திய பிரதேச மாநிலத்தில் சக்ரேஷ் ஜெய்ன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அன்று கேஸ் வாங்கியுள்ளார். அதாவது பாரத் கேஸ் ஏஜென்சியில் இருந்து கேஸ் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவருக்கு 753.50 க்கு பில் கொடுக்கப்பட்டது. ஆனால் டெலிவரி பாய் அவரிடமிருந்து 755 வாங்கியுள்ளார். திரும்ப மீதம் 1.50 சக்ரேஷ் கேட்டபோது, அந்த பணத்தை கேஸ் ஏஜென்சியிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்திடம் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மனுதாரருக்கு 4,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதோடு அவரிடம் பெற்ற 1.50 ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டது. இது வெறும் 1.50 காக தொடரப்பட்ட வழக்கு அல்ல, எங்களது உரிமை மற்றும் சுயமரியாதை காண போராட்டம் என்று சுற்றி தெரிவித்துள்ளார்.