
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வரும் நிலையில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளியிலேயே வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி ஊக்க தொகைகள் வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கு தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் வங்கி கணக்குகள் தொடங்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.