
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரெகுவா மன்சூர் கிராமத்தில் ராமானந்த் மிஸ்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு பேரனும் ஒரு வயதில் ஒரு பேத்தியும் இருக்கிறார்கள். இதில் 10 வயது சிறுவன் நேற்று முன் தினம் தன்னுடைய ஒரு வயது தங்கையை அடித்து கொலை செய்துள்ளான். அதாவது குச்சி மற்றும் செங்கல் போன்றவைகளால் தன்னுடைய தங்கையை முகத்தில் அடித்து அவன் கொலை செய்தான்.
இதை பார்த்து மிஸ்ரா மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 10 வயது சிறுவனுக்கு மனநலன் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.