பாகிஸ்தானில் சமீப நாட்களாக பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உயர்ந்துள்ளது. குறிப்பாக டீசல் பெட்ரோல் போன்றவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் 280க்கு விற்கப்பட்ட நிலையில் வரலாற்றில் முதல் முறையாக தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 305.36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதேபோன்று டீசலும் 311.84 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு கராச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.