
தன்னுடைய கணவர் ரன்வீர் கபீரை விட நடிகை ஆலியா பட் அதிக சொத்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்தான் ஆலியா பட். வாரிசு நடிகையான இவர் 2012 ஆம் வருடம் வெளிவந்த “ஸ்டூடண்ட் ஆப் தி இயர்” என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ரன்வீர் கபீரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய மகளும் இருக்கிறார்.
இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, “தன்னுடைய கணவர் ரன்வீர் கபீரை விட ஆலியா பட் அதிக சொத்துக்கு சொந்தக்காரி என்று கூறப்படுகிறது. இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டும் 517 கோடி இருக்குமாம். மேலும் ரன்பீர் கபூரின் சொத்து மதிப்பு 23 கோடி என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் கணவரை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக ஆலியா பட் இருக்கிறார். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.