
உதகையில் மத்திய பேருந்து நிலையம் பக்கத்தில் 10 வருடத்திற்கும் மேலாக குதிரை பந்தயம் மைதானம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ரூபாய் 822 கோடி குத்தகை பாக்கி செலுத்தாததையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி வருவாய் துறை அதிகாரிகள் இந்த குதிரை பந்தயம் மைதானத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
குத்தகை காலம் 19718 உடன் முடிந்த நிலையில் அதன் பிறகு குத்தகை தொகையை செலுத்தாமல் இந்த மைதானமானது இயங்கி வந்துள்ளது. இது குறித்த வழக்கில் 2019 ஆம் வருடம் குதிரை பந்தயம் மைதானத்தை மீட்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் உதவி கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் அதிகாரிகள் 52.4 ஏக்கர் மைதானத்தை மீட்டுள்ளனர்.