
இத்தாலியின் ரோம் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள டெஸ்லா கார் டீலர்ஷிப் ஒன்றில் ஏற்பட்ட மர்ம தீவிபத்தில் 17 டெஸ்லா கார்கள் தீயில் கருகி அழிந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவைத்தல் (arson) என சந்தேகம் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாலியின் பயங்கரவாத தடுப்பு பிரிவான Digos, இந்த வழக்கை விசாரித்து வருகின்றது. அனார்க்கிஸ்ட் (anarchist) கும்பல்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். ட்ரோன் மூலம் பெறப்பட்ட காட்சிகளில், தீயில் கருகிய வாகனங்கள் டீலர்ஷிப் வளாகத்தில் வரிசையாக கிடப்பது தெரியவந்துள்ளது.
இந்த தீவிபத்து காலையில் 4.30 மணி அளவில் ஏற்பட்டதாகவும், அதனால் டீலர்ஷிப் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.மேலும் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்குக்கு சொந்தமானவை. இவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து ஐரோப்பாவில் வலதுசாரி கட்சிகளுக்கு தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தியதால் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது திட்டமிட்ட ஒரு நாச வேலை என்பதால் விசாரணைகள் தீவிரமாக நடைபெறுகிறது.