இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சாலை விதிகளை மதிக்காமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு ஒரு கெட்ட செய்தி வெளியாகியுள்ளது. நெல்லையில் தலைக் கவசம் அணியாமலும், செல்போனில் பேசியபடியும் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற ஒரு பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளனர். இது போன்ற நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.