
தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவியில் பிரபல நடிகையாக உள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் மிகவும் சிறப்பான நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். இவர் காக்கா முட்டை திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருதை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கில் இவர் நடித்த சங்கராந்தி வஸ்துனம் என்ற படம் நல்ல ஹிட் அடித்தாலும் தனக்கு இன்னும் ஒரு தெலுங்கு படத்தின் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார் . இது குறித்து பேசிய அவர், தனக்கு வாய்ப்பு வழங்க தெலுங்கு திரையுலகினரும் மக்களும் கால அவகாசம் எடுத்துக் கொள்வார்கள் என்று நினைப்பதாகவும் தான் கமர்சியல் ரக ஹீரோயின் கிடையாது என்பதால் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லையோ என்று தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.