அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் கடந்த புதன்கிழமை காட்டுத்தீ பரவத் துவங்கியது. ஐந்து நாட்களாக நெருப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் ராணுவம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் தீ பரவுவது குறையவில்லை. இந்த காட்டுத்தீயினால் 67 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது 80க்கு அதிகரித்துள்ளது.

இந்த காட்டு தீக்கு 1700-களில் உருவாக்கப்பட்ட சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் லஹேனா நகரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள வறண்ட சூழலும் காற்றின் குறைவான ஈரப்பதமும் வேகமான காற்றும் தான் காட்டுத்தீ தொடர்ந்து பரவ காரணமாக கூறப்படுகிறது. இந்த காட்டுத்தீயினால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.