
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. வருகின்ற 22 ஆம் தேதி இந்த போட்டி தொடங்க இருக்கும் நிலையில் தொடருக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் அக்சர் பட்டேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டன்ஷிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக் கூறுகையில் தனக்கு ஹர்திக் எதற்காக துணை கேப்டன்ஷிப் பதிவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது உண்மையாக தெரியவில்லை. அவர் துணை கேப்டனாக இருந்த போது இருதரப்பு தொடர்களிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது எனக் கூறியுள்ளார்.