தமிழகத்தில் தற்போது வரை ஒவ்வொரு வீட்டிலும் மின்வாரிய ஊழியர்கள் நேரில் வந்து மீட்டர் அள வீட்டை கணக்கிட்டு கட்டணத்தை முடிவு செய்கின்றனர். அதன்படி ஊழியர்களின் கணக்கிட்டு எழுதும் யூனிட் அடிப்படையில் பொதுமக்கள் மின்சார கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.

தற்போது இந்த நடைமுறைக்கு பதிலாக மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கிடுவதற்கு தமிழக மின்வாரியம் ஸ்மார்ட் மீட்டர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கு மின்சார வாரியம் புதிய டெண்டர் கோரியது. டென்டரின் தேர்வாகும் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு மீட்டர் பொருத்தம் மற்றும் பராமரிப்பு மேற்கொள்ள நிபந்தனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது