ஆஸ்திரேலியா அணி வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை இந்திய வீரர் புஜாராவுக்கு வழங்கினார் பேட் கம்மின்ஸ்..

இந்தியாவில் தற்போது பார்டர் கவாஸ்கர் டிராபி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற  2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 வித்தியாசத்தில் வீழ்த்தி முன்னிலை பெற்றது..

இந்த போட்டியில் புஜாரா தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். எனவே அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியா அணி தங்களது வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை புஜாராவுக்கு பரிசளித்தது. இந்த ஜெர்சியை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் புஜாராவுக்கு வழங்கினார். இந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில் மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது.