
மதுரை மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டி விலக்கு பகுதியில் 4 பள்ளி மாணவிகளை ஏற்றி கொண்டு ஒரு ஆட்டோ சென்றது. அந்த ஆட்டோ மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்ல முயன்றது. அப்போது மதுரை நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் ஆட்டோ மீது மோதியது. இதனால் ஆட்டோ கவிழ்ந்து அதில் பயணம் செய்த 4-ஆம் வகுப்பு மாணவி ரித்திகா(9) படுகாயமடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ரித்திகாவை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரித்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.